விஜய் வந்தா வரட்டும் எல்லாம் அவர் விருப்பம்: நயினார் விரக்தி

அவனியாபுரம்: பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேர வேண்டும். தவெக தலைவர் விஜய் வருவதும், வராததும் அவருடைய விருப்பம். திமுக கூட்டணியில் நயினார் நாகேந்திரன் சலசலப்பை ஏற்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரை திருமாவளவன், செல்வப்பெருந்தகை மட்டுமின்றி முதல்வரிடமும் ஒவ்வொரு இடத்திலும் நட்புணர்வுடன் மட்டுமே பழகினேன். கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்துவது என் வேலையில்லை. இவ்வாறு கூறினார்.

The post விஜய் வந்தா வரட்டும் எல்லாம் அவர் விருப்பம்: நயினார் விரக்தி appeared first on Dinakaran.

Related Stories: