சென்னை: சமூக நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு இ-சேவை இணைய முகப்பின் https://www.tnesevai.tn.gov.in/ மூலம் முதியோர் இல்லங்களை பதிவு செய்தல், பெண்களுக்கான இல்லங்கள் பதிவு மற்றும் உரிமம் வழங்குதல், பெண்களுக்கான இல்லங்கள் பதிவு மற்றும் உரிமம் வழங்குதல், பணிபுரியும் மகளிர் விடுதிக்கான உரிமம் வழங்குதல், சமூக நலத்துறையின் கீழ் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள், தங்களுடைய உரிமங்கள் காலாவதியாகும் போது புதிய இணையதள நடைமுறையைப் பயன்படுத்தி தங்கள் உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும் உரிமம் பெற்ற அனைத்து நிறுவனங்களும் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தமிழ்நாடு இ-சேவை இணைய முகப்பை பார்வையிட வேண்டும், தங்கள் பதிவுகளை புதுப்பிக்க வேண்டும், தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும், உரிமங்கள் மற்றும் பதிவுகள் தேவைப்படும் விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பிக்கும் வசதியினை பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post புதிய இணையதளம் மூலம் பணிபுரியும் பெண்கள் விடுதிக்கான உரிமம் போன்றவை புதுப்பிக்கலாம்: சமூக நலத்துறை தகவல் appeared first on Dinakaran.