ஹரியானா: ஹரியானாவில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் பரிதாபத்தில் செக்டர்-09 வது பகுதியில் ஜிம் ஒன்று உள்ளது. இங்கு பங்கஜ் ஷர்மா, வயது 37 என்ற இளைஞர் செக்டர்-09 வது பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடம் ஒன்றில் தோள்களுக்கான Pull-up பயிற்சியை மேற்கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென உடற்பயிற்சி கூடத்திலேயே பின்னோக்கி கீழே சாய்ந்து மயங்கி விழுந்தார். இதனைக் கண்டதும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர் அவருக்கு சிபிஆர் உள்ளிட்ட முதலுதவி சிகிச்சைகளை அளித்து காப்பாற்ற முயன்ற போது அந்த முயற்சி பலனளிக்கவில்லை. இந்நிலையில், அவர் உயிரிழந்தார். ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு திடீர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post ஹரியானாவில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணம்..!! appeared first on Dinakaran.
