குடிமங்கலம் வடக்கு ஒன்றியத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை

 

உடுமலை, ஜூலை 4: குடிமங்கலம் வடக்கு ஒன்றியம் சோமவாரபட்டி ஊராட்சி கண்டியம்மன் கோவில் வீதியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதில் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் கலந்து கொண்டு நேற்று துவக்கி வைத்தனர்.
நிகழ்வில் ஒன்றிய செயலாளர் அணிக்கடவு கிரி, உடுமலை தொகுதி பொறுப்பாளர் தமிழ் மறை, செயற்குழு உறுப்பினர் சியாம் பிரசாத், மாவட்ட விவசாய அமைப்பாளர் ரகுபதி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அனிதா செல்வராஜ், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் லதா, தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன் உட்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post குடிமங்கலம் வடக்கு ஒன்றியத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை appeared first on Dinakaran.

Related Stories: