×

ரூ.1.05 லட்சம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் கொள்முதல்

புதுடெல்லி: டெல்லியில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலானது பல்வேறு பாதுகாப்பு கொள்முதல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கவச மீட்பு வாகனங்கள், மின்னணு போர் அமைப்பு, முப்படைகளுக்கான ஒருங்கிணைந்த பொதுவான மேலாண்மை அமைப்பு மற்றும் தரையில் இருந்து வான் ஏவுகணைகள் ஆகியவற்றை வாங்குவதற்கு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. மொத்தம் ரூ.1.05லட்சம் கோடி மதிப்புள்ள ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள், தானியங்கி நீர் மூழ்கிகள் வாங்குவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த கொள்முதல் கடற்படை மற்றும் வணிக கப்பல்களுக்கு ஏற்படும் அபாயங்களை குறைப்பதற்கு உதவும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

The post ரூ.1.05 லட்சம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் கொள்முதல் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Defence Acquisition Council ,Union ,Defence Minister ,Rajnath Singh ,Delhi ,Dinakaran ,
× RELATED கொல்கத்தா ஸ்டேடியம் வன்முறை –...