பிரெட் காஜா

தேவையானவை:

பிரெட் துண்டுகள் – பத்து,
சர்க்கரை – 1 கப்,
ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை,
பாதாம், பிஸ்தா, முந்திரி – தலா ஒரு தேக்கரண்டி,
எண்ணெய் – 100 கிராம்.

செய்முறை:

பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு, விரும்பிய வடிவில் நறுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரெட் துண்டுகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு கம்பி பதத்தில் பாகு காய்ச்சி வைக்கவும். இதில் பொரித்து வைத்துள்ள பிரெட் துண்டுகளை போட்டு, பத்து நிமிடங்கள் ஊறவைத்து எடுத்து, மேலே துருவிய பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு வகைகளை தூவி அலங்கரித்தால், சுவையான ‘காஜா’ தயார்.

The post பிரெட் காஜா appeared first on Dinakaran.