
நாட்டிங்காம்: இந்திய யு 19 அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் மற்றும் 4 நாட்கள் கொண்ட 2 டெஸ்ட்டில் ஆடுகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றிபெற்ற நிலையில் 3வது போட்டி நேற்று நாட்டிங்காமில் நடந்தது. மழை காரணமாக 40 ஓவர்களாக நிர்ணயிக்கப்பட்டு நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்துயு 19 அணி 40 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 268 ரன் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில், ஐபிஎல் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி 31 பந்தில் 6 பவுண்டரி, 9 சிக்சருடன் 86 ரன் விளாசினார்.
இதன் மூலம் யு 19 ஒன்டே வரலாற்றில் வேகமாக 80 ரன் எடுத்த சாதனையை வைத்திருந்த சுரேஷ் ரெய்னாவையும் வைபவ் முறியடித்தார். விஹான் மல்ஹோத்ரா 46, கனிஷ்க் சௌஹான் நாட் அவுட்டாக 43 ரன் அடித்தனர். 34.3 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன் எடுத்த இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றி மூலம் 2-1 என இந்தியா முன்னிலை வகிக்க 4வது போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.
The post இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒன்டே: வைபவ் சூர்யவன்ஷி `சூறாவளி’யில் இந்தியா யு19 அணி அசத்தல் வெற்றி appeared first on Dinakaran.
