- திமுக இளைஞரணி பொதுக்குழு கூட்டம்
- சிவகங்கை
- வடக்கு ஒன்றிய தி.மு.க
- Kalaiyarkoil
- சூரக்குளம்
- கலைஞர்
- திராவிட மாதிரி ஊராட்சி
- யூனியன்
- சக்திதாசன்
- தின மலர்
சிவகங்கை, ஜூலை 3: சிவகங்கை அருகே சூரக்குளத்தில் காளையார்கோவில் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞரின் 102வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சக்திதாசன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கிங்கார்த்திக் வரவேற்றார். திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் கென்னடி முன்னிலை வகித்தார். தலைமைக்கழக பேச்சாளர்கள் கணேசன், ராஜபாரதி சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மதிவாணன், நாட்டரசன்கோட்டை முன்னாள் பேரூர் செயலாளர் கணேசன், ஒன்றிய துணை செயலாளர் கண்ணாத்தாள் தென்னரசு, தகவல் தொழில்நுட்ப பிரிவு சுசீந்திரன், கீரனூர் தமிழ்செல்வன், விட்டனேரி அசோக் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post திமுக இளைஞரணி பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.
