புதுடெல்லி: மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தன. இதன் ஓராண்டு நிறைவு தினம் நேற்று முன்தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பதன் எக்ஸ் பதிவில், “புதிய குற்றவியல் சட்டங்கள் பெரியளவில் வெட்டி, ஒட்டும் செயல்முறை. அதில் சில புதிய விதிகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய சீர்திருத்தம் என மோடி அரசு கூறி வருகிறது. ஆனால் உண்மையில் அது அப்படி இல்லை.
புதிய குற்றவியல் மசோதாக்களை ஆய்வு செய்த நாடாளுமன்ற குழுவில் நான் இருந்தேன். அப்போது நான் அனுப்பிய எதிர்ப்புக்குறிப்பில், ஐபிசியின் 90% – 95%, சிஆர்பிசியின் 95% மற்றும் சாட்சிய சட்டத்தின் 99% முறையே புதிய சட்ட மசோதாவில் வெட்டி சேர்க்கப்பட்டுள்ளன என தெரிவித்திருந்தேன். புதிய விதிகள் சில ஏற்கத்தக்கவை. சில ஏற்று கொள்ள முடியாதவை. இது நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறையினரிடையே நீதி நிர்வாகத்தில் குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தி உள்ளது” என தெரிவித்துள்ளார்.
The post 3 புதிய குற்றவியல் சட்டங்கள் வீணானது: ப.சிதம்பரம் கருத்து appeared first on Dinakaran.
