தேனி, ஜூலை 3: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் ஓய்வூதியதாரர்களின் குறைகளை களையும் வகையில் ஸ்பர்ஸ் மொபைல் வேன் புரோக்ராம் நடத்தப்பட உள்ளது.
இது குறித்து தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேனி மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைப்பணியில் இருந்து ஓய்வு பெற்று, ஓய்வூதியம் பெற்று வரும் முன்னாள் படைவீரர்கள், அவரைச் சார்ந்தோர்கள் தங்களது ஓய்வூதியம் தொடர்பான குறைகளை களைவதற்காக ஸ்பர்ஸ் மொபைல் வேன் புரோகிராம் வருகிற 7ம் தேதி மற்றும் 8ம் தேதிகளில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடத்தப்பட உள்ளது.எனவே, தேனி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவரை சார்ந்திருப்போர் உரிய ஆவணங்களுடன் ஸ்பர்ஸ் மொபைல் வேன் ஓய்வூதிய குறைகளை கூட்டத்தில் கூறலாம். மேலும், இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு தேனி மாவட்ட முன்னாள் படை வீரர் அலுவலக தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டோ அல்லது நேரில் சென்றோ தெரிந்து கொள்ளலாம்.
The post ஓய்வூதியர் குறைதீர் முகாம் 7, 8ம் தேதிகளில் நடக்கிறது appeared first on Dinakaran.
