×

‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் வரும் 7ம் தேதி முதல் எடப்பாடி சுற்றுப்பயணம்

சென்னை: ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் வரும் 7ம் தேதி முதல் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுதொடர்பாக, அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி `மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில், வரும் 7.7.2025 முதல் 23.7.2025 வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி 7ம் தேதி கோவை மேட்டுப்பாளையம், 8ம் தேதி கோவை மாநகர், 10ம் தேதி விழுப்புரம் விக்கிரவாண்டி மற்றும் திண்டிவனம், 11ம் தேதி விழுப்புரம், 12ம் தேதி கடலூர், 14ம் தேதி கடலூர் குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி,
15ம் ேததி பெரம்பலூர், அரியலூர், 16ம் தேதி சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோவில், 17ம் தேதி மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், 18ம் தேதி திருவாரூர், நாகை, கீழ்வேளூர், 19ம் தேதி நாகை, வேதாரண்யம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, 21ம் தேதி திருவாரூர் மன்னார்குடி, கும்பகோணம், 22ம் தேதி தஞ்சாவூர் பாபநாசம், திருவையாறு, 23ம் தேதி தஞ்சாவூர் மத்தியம் ஒரத்தநாடு, பேராவூரணி பட்டுக்கோட்டை ஆகிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது சம்பந்தப்பட்ட மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் வரும் 7ம் தேதி முதல் எடப்பாடி சுற்றுப்பயணம் appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Nadu ,Chennai ,Edappadi Palaniswami ,Tamil Nadu ,AIADMK ,Assembly ,Tamil Nadu… ,
× RELATED தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள்...