×

பேராவூரணி அரசு கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிமுக பயிற்சி வகுப்பு

 

பேராவூரணி, ஜூலை 2: பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான ஒரு வார கால அறிமுகப் பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் இராணி தலைமை வகித்தார். .வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் பழனிவேலு வரவேற்றார். தஞ்சாவூர் காவல் துணை கண்காணிப்பாளர் திவ்யா அறிமுக பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். விழாவில் வணிக நிர்வாகவியல் பேராசிரியர் ஜெயக்குமார், தமிழ்த்துறை பேராசிரியர் உமா, கணினி அறிவியல் துறை பேராசிரியர் ஜமுனா, ஆங்கிலத்துறை பேராசிரியர் நித்தியசேகர், கணிதத்துறை பேராசிரியர் மோகணசுந்தரம், வணிகவியல் துறை பேராசிரியர் முத்துகிருஷ்ணன், இயற்பியல் துறை பேராசிரியர் நந்தினி ஆங்கிலத்துறை பேராசிரியர் விணோத்குமார் வணிகவியல் துறை பேராசிரியர் தேவி, வேதியியல் துறை பேராசிரியர் கஸ்தூரி ஆகியோர் மாணவர்கள் தங்களது எதிர்கால வாழ்க்கை சிறப்படைய பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பேசினார்கள். முதலாமாண்டு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிறைவாக வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர் அருண்மொழி நன்றி கூறினார். வணிகவியல் துறை பேராசிரியர் முத்துகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

 

The post பேராவூரணி அரசு கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிமுக பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Tags : Peravoorani Government College ,Peravoorani ,Peravoorani Government Arts and Science College ,Dr. ,Irani ,Department of Business Administration ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...