திருப்பூர், ஜூலை 2: திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகில் இயங்கி வரும் குரு சர்வா சிஏ அகாடமியில் நேற்று 77வது பட்டய கணக்காளர் தின நிகழ்ச்சி நடந்தது. அகாடமியின் சிஇஓ அருணாச்சலம் வரவேற்றார். இதில், திருப்பூர் பட்டய கணக்காளர் சங்கத்தின் பைனான்சியல் லிட்டரசி கமிட்டி மற்றும் இன்வெஸ்ட்டர் அவெர்னஸ் கமிட்டி சேர்மேன் சிஏ அருள் ஜோதி கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் சிறப்பு உரையாற்றினார்.
இதில், அவர் நம் நாட்டின் வளர்ச்சியிலும், பொருளாதாரத்திலும் ஆடிட்டர்களின் முக்கியத்துவம் குறித்தும், வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி குறித்தும் எடுத்துரைத்ததோடு மாணவர்களின் சந்தேகங்களுக்கும் பதில் அளித்தார். பின்பு அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாணவர்கள் கலை நிகழ்ச்சி, வினாடி வினா மற்றும் பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்றனர். சிஏ தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாராட்டு செய்யப்பட்டது. முடிவில் அகாடமி தாளாளர் சுதாராணி அவர்கள் நன்றி கூறனார்.
The post குரு சர்வா சிஏ அகாடமியில் பட்டய கணக்காளர் தின கொண்டாட்டம் appeared first on Dinakaran.
