×

தக்கலை அருகே பைக் மோதி மூதாட்டி படுகாயம்

குமாரபுரம், ஜூலை 2: தக்கலையை அடுத்த மருதூர்க்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள் (80). இவர் தக்கலை அரசு மருத்துவமனையில் மருந்து வாங்கி விட்டு வீட்டுக்கு பஸ்சில் சென்றுள்ளார். சுவாமியார்மடம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது வேகமாக வந்த, அடையாளம் தெரியாத பைக் செல்லம்மாள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அவரது மகன் வின்சென்ட் தக்கலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற பைக் குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post தக்கலை அருகே பைக் மோதி மூதாட்டி படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Thakkalai ,Kumarapuram ,Chellammal ,Marudhurkurichchi ,Thakkalai government hospital ,Swamiyarmadam ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...