×

பள்ளிப்பட்டு இளைஞரணி சார்பில் திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க கூட்டம்

 

பள்ளிப்பட்டு, ஜூன் 28: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி மற்றும் பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில், திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் வெளியகரம் ஊராட்சியில் நேற்று முன்தினம் நடந்தது. வடக்கு ஒன்றிய செயலாளர் சி.ஜெ.சீனிவாசன் தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கலீல் முன்னிலை வகித்தார்.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருத்தணி ம.கிரண் அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில், மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ கலந்துக்கொண்டு திராவிட மாடல் அரசின் திட்டங்கள் குறித்து கிராம மக்களுக்கு விளக்கி பேசினார். முன்னாள் ஒன்றிய செயலாளர் பி.ரவீந்திரநாத், ஒன்றிய நிர்வாகிகள் திருமலை, செங்கைய்யா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post பள்ளிப்பட்டு இளைஞரணி சார்பில் திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Pallipattu Youth Union ,DMK government ,Pallipattu ,Veliyagaram panchayat ,Tiruvallur West District ,DMK Youth Union ,Pallipattu North Union DMK Youth Union ,Dinakaran ,
× RELATED மாவட்டம் முழுவதும் மழையால் சேதமான சாலைகள் சீரமைப்பு