×

நுள்ளிவிளையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்

 

திங்கள்சந்தை, ஜூன் 26: நுள்ளிவிளை ஊராட்சி 14 வது வார்டு காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நுள்ளிவிளையில் நடந்தது. நுள்ளிவிளை ஊராட்சி கிழக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜோசப்பராஜ் தலைமை வகித்தார். குருந்தன்கோடு தெற்கு ஒன்றிய செயல் தலைவர் ஆல்பர்ட் ஜீவமணி, வட்டார துணைத் தலைவர் பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வி வரவேற்றார். மணக்காவிளை குளத்தை தூர்வார கேட்டுக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வார்டு தலைவர் டோரா நன்றி கூறினார். அகிலா, குளோரி, அன்னம்மாள், விக்டோரியா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post நுள்ளிவிளையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress Committee Meeting ,Nullivilai ,Congress ,Committee ,Panchayat ,14th Ward ,Nullivilai Panchayat East Congress Committee ,President ,Josephapparaj ,Kurundancode South Union ,Executive ,Albert Jeevamani ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...