×

பதஞ்சலி சார்பில் 3 பல்கலை.களுடன் ஒரேநாளில் ஒப்பந்தம்

 

சென்னை, ஜூன் 26: பதஞ்சலி பல்கலைக்கழகம், பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நாட்டின் புகழ்பெற்ற 3 பல்கலைக் கழகங்களுடன் கல்வி, மருத்துவம், யோகா, ஆயுர்வேதம், திறன் மேம்பாடு, இந்திய அறிவு மரபு மற்றும் பிற துறைகள் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று ஒரே நாளில் கையெழுத்தானது.

இந்தநிகழ்வில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ஷங்கர் ஷா பல்கலை துணை வேந்தர் ஹிர்தா பிரசாத் திரிபாதி, சட்டீஸ்கரை சேர்ந்த ஹேம்சந்த் யாதவ் பல்கலைக்கழக துணை வேந்தர் சஞ்சய் திவாரி மற்றும் மத்திய பிரதேசத்திலுள்ள மகாத்மா காந்தி சித்திரகூட் கிராமோதய விஷ்வ வித்யாலயா துணைவேந்தர் பாரத் மிஷ்ரா ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்வில் அனைத்து அறிஞர்களும் பதஞ்சலி சார்பில் மேற்கொள்ளப்படும் பணியை பாராட்டினர். பதஞ்சலி பல்கலைக்கழக துணைவேந்தர் ஆச்சார்ய பாலகிருஷ்ணா வரலாறு, எழுத்து, மொழிபெயர்ப்பு உரை, வேலைவாய்ப்பு ஆய்வுகள், மருந்தியல் மற்றும் பதஞ்சலி சார்பில் மேற்கொள்ளப்படும் இதர பணிகள் குறித்து விளக்கினார். மேலும், ரிஷி கிராந்தி யோகா புரட்சி மற்றும் கல்வி புரட்சியானது நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு தொடர் பலனைத் தரும் என்றும் நம்புவதாகவும் தெரிவித்தார்.

The post பதஞ்சலி சார்பில் 3 பல்கலை.களுடன் ஒரேநாளில் ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : Patanjali ,Chennai ,Patanjali University ,Patanjali Research Institute ,
× RELATED மாவட்டம் முழுவதும் மழையால் சேதமான சாலைகள் சீரமைப்பு