விமானம் தீப்பற்றி இருந்ததால் அதில் இருந்தவர்கள் பெரும்பாலும் கருகிய நிலையிலேயே மீட்கப்பட்டனர். இதன் காரணமாக டிஎன்ஏ மூலமாக உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றது.
மொத்தம் 251 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது. 241 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு உதவுவதற்காக பாஜ சார்பில் நியமிக்கப்பட்ட உள்ளூர் எம்எல்ஏ ஹஸ்முக் படேல் கூறுகையில், ‘‘பொதுவாக நகைகள், தலைமுடி உள்ளிட்டவற்றின் மூலமாக இறந்தவர்களின் உடல்கள் அடையாளப்படுத்தப்படும்.
விபத்தில் சில உடல்கள் உள்ளுறுப்புகள் வெளியே தெரியும் அளவுக்கு எரிந்த நிலையில் மீட்கப்பட்டு இருந்தது. சில உடல்கள் முழுவதும் கருகிவிட்டன என்பதை கவனித்தோம். சிலரின் உடல்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உலோக கம்பி, தட்டுகள், தண்டுகள் போன்றவை பொருத்தப்பட்டு இருப்பதை கண்டறிந்தோம். இவையும் சிலரது உடல்களை அடையாளம் காணும் செயல்முறையை எளிதாக்க உதவியது” என்றார்.
The post ஆபரேஷனின் போது உடலில் பொருத்தப்பட்டது விமான பயணிகளை அடையாளம் காண உதவிய உலோக பிளேட், கம்பி appeared first on Dinakaran.