ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) கட்சி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து கடந்த 30 வருடங்களாக அதன் தலைவராக லாலு பிரசாத் யாதவ் தொடர்ந்து பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் கட்சியின் தலைவர் பதவிக்கு நேற்று மனுதாக்கல் செய்தார். வயது முதிர்வு பல்வேறு உடல் நிலை பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் நேற்று ஆர்ஜேடி கட்சி அலுவலகத்துக்கு வந்தார்.
அவருடன் அவரது மகனும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் வந்திருந்தனர். மனுதாக்கல் முடிந்ததும் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், லாலு பிரசாத் தனது பதவி காலத்தை முடித்து விட்டார். அவர் மீண்டும் தலைவராக உள்ளது கட்சி தொண்டர்களிடையே மிக பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது தலைமையில் கட்சிக்கு மிக பெரிய வெற்றி கிடைக்கும் என்றார்.
The post ஆர்ஜேடி தலைவர் பதவிக்கு லாலு பிரசாத் மனுதாக்கல் appeared first on Dinakaran.