நீட் என்பது முதல் கோணல், முற்றிலும் கோணல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: நீட் என்பது முதல் கோணல், முற்றிலும் கோணல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். “நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது. நீட் குறித்து தங்கள் எஜமானர்களிடம் பேச அதிமுகவினருக்கு நேரமோ, மானமோ இல்லை” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; ‘நீட் தேர்வு தகுதியைப் பற்றியது அல்ல, சந்தையைப் பற்றியது மட்டுமே என்பதை நிரூபிக்கும் மற்றொரு வழக்கு. அதனால்தான் நாங்கள் அதை சத்தமாகவும் தெளிவாகவும் சொல்கிறோம், #NEETisnotNEAT, அதற்கு எங்களுக்கு எல்லா காரணங்களும் உள்ளன.

தரம், தரம் என்றார்கள்!

#NEET தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது.

நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல்! அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான்.

நீட் – முதல் கோணல் முற்றிலும் கோணல்!

RSS – BJP மாநாடுகளில் showpiece-ஆக உட்கார நேரமிருக்கும் அ.தி.மு.க.வினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை” என தெரிவித்துள்ளார்.

The post நீட் என்பது முதல் கோணல், முற்றிலும் கோணல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: