மேலும் அந்த கட்டுரையில், “ஆபரேஷன் சிந்தூர்” மூலம் உள்நாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் ட்ரோன்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. 2030ம் ஆண்டுக்குள் ட்ரோன் சந்தை 1,100 டாலராக உயரும். இது உலகளாவிய ட்ரோன் சந்தையில் 12.2% ஆக இருக்கும். முப்படைகளுக்கான ட்ரோன் தயாரிப்பதிலும், ட்ரோன் ஜாமர்கள்,அதிநவீன மின்னணு பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு முக்கிய பங்களிப்பு அளிக்கிறது. தமிழ்நாட்டில், தக்ஷா, கருடா ஏரோஸ்பேஸ், ஜூப்பா ஜியோ நேவிகேஷன், இ-பிளேன் நிறுவனம், பிக் பேங் பூம், டேட்டா பேட்டர்ன்ஸ் உள்ளிட்ட ஸ்டார்ட் அப் மற்றும் அனுபவம் வாய்ந்த நிறுவனங்கள் உள்ளன.
இந்நிறுவனங்கள், வருங்கால போர் முறைகளுக்கு தேவையான பல வகை ஆளில்லா விமானங்கள் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றன.”ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கைக்கு பின், தமிழக நிறுவனங்களின் உற்பத்திக்கான தேவை 5 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவின் ட்ரோன் உற்பத்தி மையமாக தமிழ்நாடு உள்ளது. நாட்டின் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடங்களில் ஒன்று தமிழ்நாட்டில் உள்ளது. எம்ஐடி, ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களின் துடிப்பான ஆராய்ச்சிகள் பாதுகாப்புத்துறைக்கான ட்ரோன் தொழில்நுட்பத்தில் தமிழ்நாட்டுக்கு முக்கிய இடத்தை அளித்துள்ளன.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post முப்படைகளுக்கான ட்ரோன்கள் உற்பத்தியில் முக்கிய பங்காற்றும் தமிழ்நாடு : ஆங்கில நாளிதழ் பாராட்டு appeared first on Dinakaran.