கட்சியில் தொண்டர் இணைப்பு விழா அறிவித்தது 2000, இணைந்ததோ 200P: பாஜ தலைவர்கள் அதிருப்தி

அவனியாபுரம்: மதுரை அவனியாபுரம் அருகே வலையங்குளம் கருப்புசாமி கோயில் எதிரே உள்ள மைதானத்தில் பாஜ புதிய உறுப்பினர்கள் இணையும் விழா நடைபெற்றது. பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் ஆதித்யா சேதுபதி உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாஜவில் இணைவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வெறும் 200க்கும் குறைவானவர்களே இணைந்தனர்.
மைதானத்தில் போடப்பட்டு இருந்த சேர்கள் காலியாக கிடந்தன.

ஆட்கள் அதிக அளவில் வராததால் தலைவர்கள் அதிருப்தியடைந்தனர். முன்னதாக இந்நிகழ்ச்சியை ஒட்டி பாஜகவினர் 4 வழிச்சாலை இருபுறமும் நடுவிலும் கொடியினை ஊன்றியிருந்தனர். பலத்த காற்று வீசியதால் கொடி கம்பங்கள் ரோட்டில் சாய்ந்தன. கொடி கம்பங்கள் நடுரோட்டில் சாய்ந்ததால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது.

 

The post கட்சியில் தொண்டர் இணைப்பு விழா அறிவித்தது 2000, இணைந்ததோ 200P: பாஜ தலைவர்கள் அதிருப்தி appeared first on Dinakaran.

Related Stories: