சென்னை: நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்கிறார் பழனிசாமி. தன்னுடைய ஆட்சிக்காலத்தில் வாக்குறுதி எதையும் நிறைவேற்றாத பழனிசாமி திமுகவின் வாக்குறுதியைப் பற்றி வக்கணையாகப் பேசுவது வெட்கக்கேடு.
அதிமுக கூட்டணிக் குழப்பங்கள் தேர்தல் வரை தொடர்ந்தால், அடுத்த மே தினத்தில் பழனிசாமி எதிர்க் கட்சித் தலைவர் பதவியை மட்டுமல்ல, அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை இழந்து நிற்பார். த்திரிகைகளைப் படிக்காமல், தொலைக்காட்சி செய்திகளை பார்க்காமல் வாட்ஸ்அப் தகவலை நம்பி அறிக்கை விடும் பழனிசாமிக்கு கோவம் மட்டும் டன் கணக்கில் வருகிறது.
எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத அடிமை அதிமுக ஆட்சி போல் இல்லாமல் சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் நிறைவேற்றி வருகிறார் முதல்வர். உட்கட்சி பிரச்னை, கூட்டணிப் பூசல், கூட்டணி அரசு சத்தம் எல்லாம் எம்.ஜி.ஆர் மாளிகையிலும் கமலாலயத்திலும் தைலாபுரத்திலும் இருந்து தான் நாள் தவறாமல் வருகிறது. அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாத பொம்மைதான் பழனிசாமி. வ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
The post எதிர்க்கட்சி தலைவர் பதவியை மட்டுமல்ல திமுகவின் பொதுச்செயலாளர் பதவியையும் எடப்பாடி இழப்பார்: அமைச்சர் கே.என்.நேரு கடும் தாக்கு appeared first on Dinakaran.