சேரன்மகாதேவியில் துணிகரம்: கோயில் கதவை உடைத்து கொள்ளை முயற்சி

வீரவநல்லூர்: சேரன்மகாதேவி தாமிரபரணி நதிக்கரையில் ஆவுடையம்மன் சமேத அம்மைநாதர் கோவில் உள்ளது. நவகைலாய ஸ்தலத்தில் இரண்டாவது ஸ்தலமான இங்கு நேற்று இரவு கோவிலின் கதவை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மெயின் கதவின் தாழ்பாளை கடப்பாறை மூலம் உடைத்தெடுத்த கொள்ளையர்கள் கோயில் உள்ளே நுழைய முயற்சி செய்யும்போது கதவின் உள்புறம் அமைக்கப்பட்டுள்ள அடித்தாழ்ப்பாள் ஆட்டோமேட்டிக்காக லாக் ஆகி உள்ளது.

இதனையடுத்து கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் கோயிலுக்கு வந்த அர்ச்சகர் கோயில் கதவில் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கோயில் அதிகாரிகள் மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சேரன்மகாதேவி போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post சேரன்மகாதேவியில் துணிகரம்: கோயில் கதவை உடைத்து கொள்ளை முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: