கலாம்பாக்கம் பகுதியில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பான எஃப்.ஐ.ஆர். விவரம் வெளியானது

திருவள்ளூர்: கலாம்பாக்கம் பகுதியில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக அவரது தாய் லட்சுமி அளித்த புகாரில் பதிவான முதல் தகவல் அறிக்கை விவரம் வெளியானது. “தனது மூத்த மகன் தனுஷ், சென்னையில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார். தனது மகனின் திருமணம் தொடர்பான தகவல்களை திருவள்ளூர் எஸ்.பி. அலுவலகத்தில் கடந்த 9ம் தேதி விளக்கமாக கொடுத்தேன்; கடந்த 7ம் தேதி நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து தனது இளைய மகனை 5 பேர் கொண்ட கும்பல் 2 கார்களில் கடத்திச் சென்றனர்; எனது மகன் கடத்தப்பட்டதை அறிந்து உடனடியாக 100 எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் அளித்தேன்; என் மகனுக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் காயங்களை ஏற்படுத்தி பேரம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுச் சென்றனர்” தாயார் லட்சுமி புகார் அளித்துள்ளார்.

The post கலாம்பாக்கம் பகுதியில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பான எஃப்.ஐ.ஆர். விவரம் வெளியானது appeared first on Dinakaran.

Related Stories: