மகாராஷ்டிராவில் ஆற்றுப்பாலம் இடிந்து 4 பேர் பலி: தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட 20 பேர் கதி என்ன?

புனே: புனே மாவட்டம் குண்ட்மாலா கிராமத்தில் இந்திரயானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த இரும்புப் பாலம் இடிந்து விழுந்து, 4 பேர் இறந்தனர். 38 பேர் மீட்கப்பட்டனர். மேலும் 20 பேர் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மகாராஷ்டிராவில் பருவமழை வெளுத்து வாங்குகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. புனே மாவட்டம் மாவல் தாலுகாவில் உள்ள குண்ட்மாலா கிராமத்தின் வழியே பாய்ந்தோடும் இந்திரயானி ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இரும்பு பாலத்தின் மீது நேற்று மாலை 4 மணியளவில் சுற்றுலா பயணிகள் பலர் நின்றிருந்தனர்.

அப்போது பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து, பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவலறிந்து வந்த மீட்புப் படையினர் 4 பேரை சடலமாக மீட்டனர். 32 பேர் காயங்களுடன் தப்பினர். மேலும் சுமார் 20 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை தேடும் பணி நடக்கிறது. இதனிடையே, இந்திராயானி ஆற்றுப்பாலம் பாலம் துருப்பிடித்து சேதம் அடைந்திருந்ததாலும், அதன் மீது அதிக மக்கள் கூடியதாலும் இடிந்து விழுந்திருக்கலாம் என மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்தார்.

The post மகாராஷ்டிராவில் ஆற்றுப்பாலம் இடிந்து 4 பேர் பலி: தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட 20 பேர் கதி என்ன? appeared first on Dinakaran.

Related Stories: