விமான விபத்தில் உயிரிழந்த குகி, மைதேயி பணி பெண்கள்; மணிப்பூரில் இன பாகுபாடு இன்றி மக்கள் ஒன்று சேர்ந்து இரங்கல்

கொல்கத்தா: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் 10 பணிப்​பெண்​கள் இருந்​துள்​ளனர். அவர்​களில் மணிப்​பூர் மாநிலத்​தின் குகி இனத்தை சேர்ந்த லாம்​நந்​தி​யம் சிங்​சன் மற்​றும் மைதேயி இனத்தை சேர்ந்த கந்​தோய் சர்மா காங்​பிரெய்​லாக்​பம் ஆகிய இரு​வரும் அடங்​கு​வர். இவர்​களும் விமான விபத்​தில் உயி​ரிழந்​தனர். இந்த தகவலறிந்​ததும் இவர்​களது குடும்​பத்​தினர் அதிர்ச்சியடைந்​தனர். மேலும் அரசியல் கட்சியினர், சமூக அமைப்​பினர், மணிப்​பூர் மக்​கள் என அனைவரும் தங்​கள் இன வேறு​பாட்டை மறந்து அந்​த குடும்​பத்​தினருக்கு இரங்​கல் தெரி​வித்​தனர். தவிர சமூக வலை​தளங்​களில் அந்த 2 விமான பணிப்​பெண்​களின் ஆத்மா சாந்​தி​யடைய ஆழ்ந்த இரங்​கல்​கள் குவிந்​தன. இதுகுறித்து டெல்​லி​யில் உள்ள மைதேயி பாரம்​பரிய அமைப்பின் செய்​தி தொடர்​பாளர் கூறும்​போது, ‘மணிப்​பூர் மக்​கள் இதயம் நொடிந்து போயுள்​ளனர். இனத்தை பொருட்​படுத்​தாமல், அனை​வருமே பிரார்த்​தனை செய்​தனர். இரங்​கல் தெரி​வித்து வரு​கின்​றனர்.

கடந்த 2 ஆண்​டு​களாக மணிப்​பூரில் நடை​பெற்று வரும் குக்கி – மைதேயி இன கலவரம், இந்த 2 இளம்​பெண்​களின் இறப்​பால் மங்​கி​யுள்​ளது. அவர்​கள் வானத்​தின் தேவதைகள். அவர்களது மரணம், 2 இனங்​களை ஒன்​றிணைக்க உதவி​யுள்​ளது. இந்த மனித உயிர் எத்​தனை அரியது என்​பதை அவர்​களுக்கு உணர்த்தி உள்​ளது. வாழும் வரை அமை​தி​யாக ஒன்​றிணைந்து வாழ வேண்டும் என்​பதை அவர்​களு​டைய மரணங்​கள் உணர்த்தி உள்​ளது’’ என்​றார். இதற்​கிடை​யில், லாம்​நந்​தி​யம், கந்​தோய் ஆகியோரது குடும்​பத்​தினர் அகம​தா​பாத்துக்கு சென்று, உடல்​களை அடை​யாளம் காண, டிஎன்ஏ பரிசோதனைக்​காக தங்​கள் ரத்த மாதிரி​களை வழங்​கினர். உயி​ரிழந்த லாம்​நந்​தி​யம் சிங்​சன் குடும்​பத்​தில் அவர் மட்​டும்​தான் வரு​வாய் ஈட்​டு​பவ​ராக இருந்​துள்​ளார். இவரது குடும்​பத்​தினர் காங்​போக்பி என்ற பகு​தி​யில் வாடகை வீட்​டில் வசிக்​கின்​றனர்.

 

The post விமான விபத்தில் உயிரிழந்த குகி, மைதேயி பணி பெண்கள்; மணிப்பூரில் இன பாகுபாடு இன்றி மக்கள் ஒன்று சேர்ந்து இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: