5 முறை ஒத்திவைப்பு இந்திய வீரர் ஜூன் 19ல் விண்வெளி பயணம்

புதுடெல்லி: இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக , சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 விண்கலம் கடந்த 11ம் தேதி விண்ணில் ஏவப்பட இருந்தது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் ஏவப்படவிருந்த இந்த பயணம், திடீரென ஏற்பட்ட திரவ ஆக்சிஜன் கசிவு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஆக்சியம் -4 விண்கலத்தில் ஏற்பட்ட திரவ ஆக்சிஜன் கசிவு வெற்றிகரமாக சரிசெய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வருகிற 19ம் தேதி ஆக்சியம் ஸ்பேஸ் விண்வெளி பயணத்துக்கான விண்கலத்தை ஏவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக்சியம் -4 திட்டம் இதுவரை 5 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post 5 முறை ஒத்திவைப்பு இந்திய வீரர் ஜூன் 19ல் விண்வெளி பயணம் appeared first on Dinakaran.

Related Stories: