கரூர் மாவட்ட எல்லையை கடந்து சென்ற காவிரிநீர்

கரூர் : பாசனத்திற்காக மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கரூர் மாவட்ட எல்லைக்கு நேற்று அதிகாலை 3 மணிக்கு வந்தடைந்தது.ஆண்டுதோறும் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காகவும், 16 மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூரில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் முக்கியமாக இருந்து வருகிறது.

இந்த வருடம் நேற்றுமுன்தினம் (ஜூன்12ம் தேதி) மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக அணையில் இருந்து முதற்கட்டமாக 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிகழ்வில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீரானது கரூர் மாவட்ட எல்லையான தவிட்டுப்பாளையத்திற்கு நேற்று அதிகாலை 3 மணியளவில் வந்து வாங்கல், நெரூர் வழியாக கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் கதவணைக்கு நேற்று மாலை 1,500 கனஅடி வீதம் வந்தடைந்தது.

அங்கிருந்து குளித்தலை வழியாக திருச்சியை நோக்கி சென்றது. மேலும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்க கூடும் எனவும், அதனை அப்படியே திறந்து விடப்படுவதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post கரூர் மாவட்ட எல்லையை கடந்து சென்ற காவிரிநீர் appeared first on Dinakaran.

Related Stories: