விருதுநகர், ஜூன் 14: விருதுநகர் சத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. விருதுநகர் சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் கருப்பையா தலைமையில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்டத்தில் 2013 முதல் 2025 மே மாதம் வரை 1,384 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 190 வழக்குகளில் தண்டனையும், 672 வழக்குகளில் விடுதலையும், 39 வழக்குகள் பொய் வழக்குகளாக முடிவாகி உள்ளது. மீதமுள்ள வழக்குகளின் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.
சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்தும், அதிலிருந்து விடுபடுவது எப்படி, முன்னெச்சரிக்கையாக செயல்படுவது எப்படி, பிரச்னை ஏற்பட்டால் அவசர எண்களில் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பது தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. மேலும் குழந்தைகள் பாதுகாப்பு, சட்ட நடவடிக்கைகள், பாதிப்பில் இருப்போருக்கு வழங்கப்படும் ஆலோசனைகள் விரிவாக தெரிவிக்கப்பட்டன.
The post மாவட்டத்தில் போக்சோ பிரிவின் கீழ் 12 ஆண்டுகளில் 1,384 வழக்குகள் appeared first on Dinakaran.