மதுரை, ஜூன் 14: கோவையில் இருந்து நேற்று மதுரை வந்த அரசு பஸ், ஆரப்பாளையம் பகுதியில் சாலை நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. கோவையில் இருந்து பயணிகளுடன் ராமநாதபுரம் புறப்பட்ட அரசு பஸ், மதுரை இரவு ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை லட்சுமணன் என்பவர் ஓட்டி வந்தார். அதில் 25க்கும் மேற்குட்பட்ட பயணிகள் இருந்தனர்.
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள குரு தியேட்டர் சிக்னல் அருகே வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டினை இழந்த அரசு பஸ், சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் சிலர் காயமடைந்தனர். அப்பகுதியில் இருந்தோர் அவர்களை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும், மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் 7 பயணிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து, கரிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
The post தடுப்பு சுவரில் மோதி அரசு பஸ் கவிழ்ந்தது 7 பயணிகள் காயம் appeared first on Dinakaran.