வத்தலக்குண்டு, ஜூன் 14: வத்தலக்குண்டு மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், தேனி போன்ற நகரங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. வத்தலக்குண்டு சிறப்புநிலை பேரூராட்சியிலும், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் ஏராளமான மாணவர்கள் பிளஸ் டூ படித்து வருகின்றனர். அதில் வெற்றி பெறும் வசதியான மாணவர்கள் மதுரை, திண்டுக்கல் போன்ற நகரங்களில் உள்ள கல்லூரிகளில் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
வெளியூரில் விடுதியில் தங்கி படிக்க வசதி இல்லாத ஏழை மாணவர்கள் தங்களது படிப்பை தொடர முடியாமல் விட்டு விடுகின்றனர். வத்தலக்குண்டுவில் அரசு கல்லூரி இருந்தால் தினசரி சென்று படித்து வரலாம். எனவே வத்தலக்குண்டுவில் அரசு கல்லூரி வந்தால் பொருளாதரத்தில் பின்தங்கிய மாணவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய ஏதுவாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
The post வத்தலக்குண்டுவில் அரசு கல்லூரி அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.