திருத்துறைப்பூண்டி, ஜூன் 14: திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். திருத்துறைப்பூண்டி ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற தேர்தலில், தேர்தல் அலுவலர்களாக கிருத்திகா வாசன், வைத்தியநாதன் நியமிக்கப்பட்டிருந்தனர். முறையாக வேட்பு மனுக்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு, போட்டியின்றி 9 பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஒன்றிய தலைவராக ரவீந்திர குமார், ஒன்றிய செயலாளராக பாஸ்கரன், ஒன்றிய பொருளாளராக அருளரசு, துணை தலைவராக ரவிச்சந்திரன், துணைச் செயலாளராக முத்துக்குமரன், இளைஞரணி அமைப்பாளராக முருகேசன், இலக்கிய அணி அமைப்பாளராக தமிழ்மணி, மூத்தோர் அணி அமைப்பாளராக பாஸ்கரன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளராக லட்சுமி காந்தன் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, உறுதிமொழியோடு, பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர். இறுதிகள் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினுடைய மாவட்ட செயலாளர் சண்முக வடிவேல் கலந்து கொண்டு புதிய பொறுப்பாளர்களை வாழ்த்தி பேசினார்கள். முடிவில் இலக்கிய அணி செயலாளர் தமிழ்மணி நன்றி கூறினார்.
The post திருத்துறைப்பூண்டி ஒன்றியம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொறுப்பாளர்கள் தேர்வு appeared first on Dinakaran.