அரசு வேலையை விட்டுவிட்டு சென்றதால் தான் ரஞ்சிதா விபத்தில் சிக்கினார் என்றும் பவித்ரன் விமர்சித்திருந்தார். மேலும் ரஞ்சிதாவுக்கு எதிராக சாதி ரீதியாகவும் இவர் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. துணை தாசில்தார் பவித்ரனுக்கு எதிராக கேரள முதல்வர் அலுவலகத்திலும் புகார்கள் குவிந்தன. இதைத் தொடர்ந்து அவரை துணை தாசில்தார் பதவியிலிருந்து காசர்கோடு மாவட்ட கலெக்டர் இன்பசேகரன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதற்கிடையே போலீசார் பவித்ரனை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறினர். நேற்று மாலை பவித்ரன் காவல் நிலையத்தில் ஆஜரானார். விசாரணைக்கு பின் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
The post விமான விபத்தில் பலியான நர்ஸ் குறித்து அவதூறு பரப்பிய துணை தாசில்தார் கைது appeared first on Dinakaran.