TNPSC குரூப் 1 முதன்மை தேர்வானது ஜூன் 15ம் நாள் நடைபெற இருப்பதால், அதே நாளில் நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாற்றுத் தேதிகள் www.ideunom.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.