உலகின் பாதுகாப்பான விமானமாக கருதப்படும் போயிங் 787-8 சிறப்பம்சங்கள்..!!

உலகின் பாதுகாப்பான விமானமாக போயிங் 787-8 எனப்படும் ட்ரீம் லைனர் விமானம் கருதப்படும். போயிங் 787 ட்ரீம் லைனர் விமானம் உலகின் மிகவும் பாதுகாப்பான விமானமாக கருதப்படுகிறது. இரண்டு எஞ்சின்களை கொண்ட நடுத்தர அளவிலான இந்த விமானம் எரிபொருள் சிக்கனத்திற்கும், சொகுசான பயணத்திற்கும், புதுமையான வடிவமைப்பிற்கும் பெயர் பெற்றது. கார்பன் இழை கூட்டுப்பொருட்களால் இந்த விமானம் கட்டமைக்கப்பட்டுள்ளதால் குறைவான எடை கொண்டது.

இதனால் குறைவான எரிபொருளை பயன்படுத்துகிறது. இலகுவாக பரப்பதற்கு ஏதுவாக இறக்கைகளின் முனைகள் சற்று வளைவாக அமைக்கப்பட்டுள்ளதோடு விமானத்தின் மூக்கு பகுதியில் மென்மையான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணிகள் விமானங்களிலேயே அளவிலேயே பெரிய ஜன்னல்களை கொண்டது இந்த விமானம் விமானத்தின் வெளிப்புறத்தில் உள்ள வெளிச்சத்திற்கு ஏற்றவாறு ஜன்னல்கள் ஒளியை கூட்டவும், குறைக்கவும் செய்யும் தொழில் நுட்பத்தை கொண்டுள்ளதால் விமானத்திற்குள் அதிக அளவு ஓலி ஊடுருவுவது தடுக்கப்படுகிறது.

6000 அடி உயரத்தில் பறக்கும் போதும் பயணிகளுக்கு காற்றின் அழுத்தம் அதிகரிக்காமல் சொகுசான பயணத்தை வழங்குகிறது. பகல் இரவுக்கு ஏற்ப விமானத்திற்குள் ஒளியை சரிப்படுத்தும் தொழில்நுட்பம் உள்ளது. இதன் பயணிகளுக்கு ஜெட் லேக் எனப்படுவது தவிர்க்கப்படுகிறது. அத்துடன் பயணிகள் அமைதியான சூழலில் பயணம் செய்வதை உறுதி செய்யும் வகையில் இரைச்சலை கொடுக்கும் தொழில்நுட்பம் விமானத்தில் உள்ளது. இரு வகுப்புகளில் மொத்தம் 242 பயணிகளை கையாளும் திறமை கொண்ட 787-8 விமானம் பயணதூரத்தை பொறுத்தவரையில் 13,530கி.மீ பயணம் செய்கிறது.

இது 14,010 கிலோ மீட்டர் பயணிக்கும் போயிங் 787-8 9 விமானத்தின் அடுத்த நிலையில் இருந்தாலும் 78710 விமானம் பயணிக்கும் 11.750 கிலோ மீட்டரை விட கூடுதல் தொலைவிற்கு பயணிக்கிறது. முதல் முறையாக கடந்த 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதி வானில் பரந்த போயிங் 787-8 ரக விமானத்தை ஏர் இந்தியா உட்பட அமெரிக்கன் ஏர் லைன்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ்,ஜப்பான் ஏர் லைன்ஸ், கத்தார் ஏர் லைன்ஸ், யுனைடெட் ஏர் லைன்ஸ், எத்தியோப்பியன் ஏர் லைன்ஸ் ஆகியவை பயன்படுத்தி வருகின்றன.

The post உலகின் பாதுகாப்பான விமானமாக கருதப்படும் போயிங் 787-8 சிறப்பம்சங்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: