இந்நிலையில், இந்த வழித்தடத்தில் ராமாபுரம் அருகே உயர்மட்ட பாதையில் நேற்று இரவு இணைப்பு பாலம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சரிந்து விழுந்த இணைப்பு பாலத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. மேலும் இடிபாடுகளுக்கான காரணத்தை உறுதிப்படுத்த விசாரணை நடத்தப்படும். இந்த சம்பவத்தின் போது இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உயிரிழந்ததை வருத்தத்துடன் உறுதிப் படுத்துகிறோம் என தெரிவித்திருந்தது. இந்த நிலையில், மெட்ரோ ரயில் பாலம் கட்டுமான பணியின்போது உயிரிழந்தவருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க மெட்ரோ நிர்வாகம் உத்தரவிட்டது. பாலத்தை இணைக்கும் தூண்களை பொருத்த முயன்றபோது திடீரென கீழே விழுந்ததால் பரபரப்பு நிலவியது.
The post சென்னை மெட்ரோ ரயில் பாலம் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவருக்கு ரூ.5லட்சம் இழப்பீடு..!! appeared first on Dinakaran.