அரவிந்த் சிதம்பரம், ஸ்டீபன் அவாக்யன் நினைவு செஸ் போட்டியில் முதல் இடத்தை பிடித்ததன் மூலம் தற்போது FIDE உலக தரவரிசை பட்டியலில் முதல் 10 தர இடங்களுக்குள் நுழைந்துள்ளார். அரவிந்த் சிதம்பரம் சென்னையில் கடந்த ஆண்டு SDAT யின் மூலம் நடத்தப்பட்ட சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் மாஸ்டர் பிரிவில் முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா இருவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான எலைட் திட்டத்தின்கீழ் பயன் பெற்று வருகின்றனர். சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்கள் தங்களை மேலும் தயார்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசின் எலைட் திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு ரூ.30 லட்சம் வழங்கப்படுகிறது.
விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு தேவையான அதிநவீன உபகரணங்களை வாங்கி பயன்படுத்தவும், வெளிநாடுகளுக்கு சென்று சிறந்த பயிற்சியாளர்களிடம் பயிற்சி மேற்கொள்ளவும், தொடர்ந்து சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்காகவும் எலைட் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்படுகிறது.
நார்வே செஸ் போட்டி, ஸ்டீபன் அவாக்யன் நினைவு செஸ் போட்டி ஆகியவற்றில் முன்னணி இடங்களை வென்றதன் மூலம் உலக டாப் 10 தரவரிசையில் இருக்கும் நான்கு இந்திய வீரர்களில் மூன்று பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post சர்வதேச செஸ் போட்டிகளில் வெற்றி தமிழ்நாடு செஸ் வீரர்களுக்கு துணை முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.