அமைச்சர் நேரில் அஞ்சலி

சேலம், ஜூன் 13: சேலம் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா தமிழ்மாறன். இவர் திமுக செய்தி தொடர்பாளராக உள்ளார். இவரது தந்தை அப்பாச்சி, கடந்த 5ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இல்லத்தில் உயிரிழந்த அப்பாச்சியின் படத்தினை, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து ராஜா தமிழ்மாறனின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல் தெரிவித்தார். அப்போது, திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி, சேலம் மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருண் பிரசன்னா, முன்னாள் எம்எல்ஏ தமிழரசு மற்றும் விபின் நாகேந்திரன், கிரிதரன், ஜோதிவேல், கலைச்செல்வன், சத்யா, இளங்கோ, கிரண், முரளிகிருஷ்ணன், தேவ நாகேந்திரன், சரண், ரவி, மணி, சூர்யா, ஜேம்ஸ் (எ) ராஜேஸ், ஆசிப், நவீன்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post அமைச்சர் நேரில் அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: