குறைந்தபட்ச ஆதரவு விலையில் 50,750டன் நிலக்கடலை கொள்முதல்: ஒன்றிய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: அரியானா, குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் 54166 டன் நிலக்கடலை கொள்முதல் செய்வதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சந்தையில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கீழே தானியங்களின் விலை குறையும்போது விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்காக ஒன்றிய அரசு விலை ஆதரவு திட்டத்தின் கீழ் தானியங்களை கொள்முதல் செய்கின்றது. இந்நிலையில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் 2024-2025ம் ஆண்டில் துவரம் பருப்பு, உளுந்து மற்றும் மைசூர் பருப்பு ஆகியவற்றின் 100 சதவீத உற்பத்தியை கொள்முதல் செய்வதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் ஒரு ஒரு பகுதியாக அரியானா, குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் 54166டன் பச்சைப்பயிறு மற்றும் 50750 டன் நிலக்கடலையை கொள்முதல் செய்வதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் ஆந்திராவில் கொள்முதல் காலத்தை ஜூன் 26ம் தேதி வரை 15 நாட்கள் நீட்டிக்கவும் ஒன்றிய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஒப்புதல் அளித்துள்ளார்.

The post குறைந்தபட்ச ஆதரவு விலையில் 50,750டன் நிலக்கடலை கொள்முதல்: ஒன்றிய அரசு ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: