ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளி விடுதிகளில் தங்கி பயில விண்ணப்பிக்கலாம்

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2025-26ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் பள்ளி / ஐடிஐ/டிப்ளோமா/கல்லூரி விடுதிகளில் கட்டணமில்லாமல் தங்கி பயில்வதற்கு ஆர்வமுள்ள மாணாக்கர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் இணையவழியில் 10.6.2025 முதல் பெறப்படுகிறது. ஆர்வமுள்ள மாணாக்கர்கள் https:nallosai.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பித்திடுமாறு தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுதிகளில் தங்கி பயில்வதற்கு மாணாக்கர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மேலும், மாணாக்கர் மத்திய, மாநில அரசின் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் தங்கி பயில வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு 1800-599-7638 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.

The post ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளி விடுதிகளில் தங்கி பயில விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: