நாட்டின் உயரிய விருதான பத்ம விருது பெற்றவர் கோட்டா சீனிவாச ராவ். 1999 – 2004 ம் ஆண்டு வரை விஜயவாடா தொகுதி எம்எல்ஏவாக இருந்துள்ளார். சிறிது காலமாக படங்களில் இருந்து விலகி இருந்தார். பிறகு அவரைப் பற்றிய எந்த தகவலும் இல்லை. அவர் இறந்துவிட்டார் என திடீரென தகவல் பரவியது. ஆனால் அதை யாராலும் உறுதி செய்ய முடியவில்லை. இந்நிலையில் தற்போது அவரது லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. வயது மற்றும் உடல்நலக் காரணங்களால் தற்போது அவர் நடக்க முடியாமல் தவிப்பதைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த புகைப்படத்தில் காணப்படும் கோட்டா னிவாச ராவின் நிலையைப் பார்த்து நெட்டிசன்களும் ரசிகர்களும் கவலை தெரிவித்துள்ளனர். உடல்நலக் குறைவால் அவர் மிகவும் உடல் மெலிந்து காலில் கட்டு கட்டுடன் காணப்படுவதால், அவரது உடல்நிலை குறித்து ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் சமீபத்தில் அவரை சந்தித்தபோது எடுத்திருக்கிறார். அவர்தான் இதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
The post சாமி படத்தில் வில்லனாக மிரட்டியவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு பரிதாப நிலையில் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் appeared first on Dinakaran.