திருவாரூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு கூட்டம்

திருவாரூர், ஜுன் 12:திருவாரூர் மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் பொது மக்களை முழுமையாக சென்றடைய அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என கண்காணிப்பு குழு கூட்டத்தில் எம்.பி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.\ திருவாரூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கண்காணிப்புக்குழு தலைவர் செல்வராஜ் எம்.பி தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் மோகனசந்திரன், கண்காணிப்புக்குழு துணை தலைவர் முரசொலி எம்.பி, எம்எல்ஏக்கள் பூண்டி கலைவாணன், மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சமூகப்பாதுகாப்பு ஒய்வூதிய திட்டங்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம், ஜல்ஜீவன் மிஷன், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம், கனிம அறக்கட்டளை,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் பகுதி மேம்பாட்டுத் திட்டம், தூய்மை இந்தியா திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, சத்துணவுத்திட்டம், நிலப்பதிவுருக்கள் கணினிப்படுத்தும் பணி, நில அளவைப்பதிவேடுகள் துறை, பாரத பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டம், தேசிய நல்வாழ்வு குழும விதிகள், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் நிர்வாகம் குறித்தும் துறைவாரியான உயர் அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அதன் தலைவர் செல்வராஜ் எம்.பி கேட்டறிந்தார்.

பின்னர் அவர் பேசுகையில், அரசின் திட்டங்கள் பொதுமக்களை முழுமையாக சென்றடைய அலுவலர்கள் முழு முனைப்புடன் செயல்பட வேண்டும். சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகளை விரைவுப்படுத்த வேண்டும், மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு உரிய நலத்திட்டங்கள் கிடைப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான நடைமுறைகளை சாதாரண மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். வேளாண்மை துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் முழுமையாக கிடைக்கின்ற வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கிராமப்பகுதிகளில் குடிநீர் வசதிகள் தங்கு தடையின்றி கிடைக்கின்ற வகையில் திட்டங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில் டி.ஆர்.ஒ கலைவாணி, மாவட்ட திட்ட இயக்குநர் செந்தில்வடிவு மற்றும் நகராட்சி தலைவர்கள் புவனப்பிரியா செந்தில், கவிதாபாண்டியன், பாத்திமா பஷிரா, மன்னை சோழராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post திருவாரூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: