ஜெயங்கொண்டம், ஜூன் 12: ஆண்டிமடம் ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வளமையம் ஆண்டிமடத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் தொடக்கநிலை வகுப்பு ஆசிரியர்களுக்கு முதல் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்ற வருகிறது. கடந்த நான்கு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக ஜூன் 10ம் தேதி முதல் 4 கட்டங்களாக 13ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. வட்டார கல்வி அலுவலர்கள் நெப்போலியன்சுதன் குமார், பரிமளம் தலைமை வகித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் அருமைராஜ் முன்னிலை வகித்தார். முதல் கட்ட பயிற்சியில் 53 ஆசிரியர்களும், 2ம் கட்ட பயிற்சியில் 50 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான பாட புத்தகங்களில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் அடிப்படையிலும், ஆசிரியர் கையேடு, மாணவர் பயிற்சி ஏடுகளில் மாற்றம், மாணவர்களின் கற்றல் தரத்தை உயர்த்த வடிவமைக்கப்பட்டுள்ள செயல்பாடுகள், பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் துணை கருவிகள் தயாரித்தல், மாணவர்களின் திறன் அடிப்படையில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ள செயல்பாடுகள், இன்றியமையாத கற்றல் விளைவுகள், கூடுதல் வலுவூட்டும் செயல்பாடுகள், பயிற்சி தாள், நிலைவாரியான பயிற்சிகள், நானே உருவாக்குவேன் என் பக்கம், மாதத்தேர்வு முன் தயாரிப்பு, செயல்திட்டம் போன்ற செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்களுக்கு விரிவாக பயிற்சியளிக்கப்பட்டது. ஆசிரியர் பயிற்றுநர்கள் உத்திராபதி, சத்தியபாமா, அகிலா, ஆசைத்தம்பி ஆகியோர் பயிற்சியளித்தனர்.
The post தொடக்க நிலை வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி appeared first on Dinakaran.