இதேபோல், மிசோரமின் கோலாசிப் மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில், ரூ.7.04 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த போதைப்பொருட்கள் அனைத்தும் அண்டை நாடான மியான்மரிலிருந்து கடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, தற்போது அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் மாநில காவல்துறை நடத்திய அதிரடி சோதனைகளில் ரூ.45 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். மேலும் இரண்டு அடுத்தடுத்த சோதனைகளில், 1.5 லட்சம் யாபா மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு, கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
The post மியான்மரில் இருந்து கடத்தப்பட்ட ரூ.45 கோடி போதைப்பொருள் அசாமில் பறிமுதல் appeared first on Dinakaran.