மண்டபம்,ஜூன் 10: உச்சிப்புளி ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் அருகே நாகநாதர் கோயிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் பாலாபிஷேகங்கள் நேற்று நடைபெற்றது.
வேதாளை அருகே ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நாகநாதர் கோயில் அமைந்துள்ளது. நூறு ஆண்டுகளை கடந்த இந்த பழமையான கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகம் நிகழ்ச்சி கடந்த 1ம் தேதி நடைபெற்றது.
தொடர்ந்து கடந்த 9 நாட்களாக கோயிலில் நாகநாதர் ஆலயத்தில் கருவரையில் சிறப்பு பூஜைகள் மற்றும் பால் அபிஷேகங்கள் பக்தர்கள் சார்பில் நடைபெற்று வந்தது இந்த நிகழ்ச்சியின் ஒன்பதாவது நாளான நேற்று திங்கட்கிழமை வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் பக்தர்கள் விரதம் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்த பாலை சன்னதியில் அமைந்துள்ள நாதநாதருக்கு செலுத்தப்பட்டு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
10வது நாள் நிகழ்ச்சியான இன்று கோயிலில் காப்பு கட்டுதல் நிறைவு பூஜை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
The post நாகநாதர் கோயிலில் விசாக வழிபாடு appeared first on Dinakaran.