நாமக்கல், ஜூன் 10: 2009 முதல் 2018ம் ஆண்டு வரையிலும் 10ம் வகுப்பு முடித்து, மதிப்பெண் சான்றிதழ் பெறாதவர்கள் உடனடியாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நாமக்கல் அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்ட எல்லைக்குட்பட்ட இடைநிலை தேர்வு மையங்களில், மார்ச் 2009 முதல், செப்டம்பர் -2018 வரை 10ம்வகுப்பு தேர்வுகளில், தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, மதிப்பெண் சான்றிதழ்கள் தேர்வர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டன. தேர்வு மையத்தில் நேரடியாக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளாத தனித்தேர்வர்களின் 10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், தற்போது தேர்வுத்துறை உதவி இயக்கனர் அலுவலகத்தில் உள்ளது. இதுவரை மதிப்பெண் சான்றிதழ் வாங்காத தனித்தேர்வர்கள், அவற்றை உடனடியாக பெற்று கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெறாத தனித்தேர்வர்கள், இந்த அறிவிப்பு வெளியிடப்படும் நாளில் இருந்து, 3 மாதங்களுக்குள், இந்த அலுவலகத்தை, அலுவலக பணி நாட்களில், அலுவலக வேலை நேரத்தில் வந்து பெற்றுக் கொள்ளலாம். இது அவர்களுக்கான இறுதி வாய்ப்பாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post 2009-2018ம் ஆண்டு வரையிலான 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ் பெற இறுதி வாய்ப்பு உதவி இயக்குனர் தகவல் appeared first on Dinakaran.