தகவலின்படி கோவை ரயில்வே போலீசார் வந்து, தூத்துக்குடியை சேர்ந்த வின்சென்ட் ராஜ் (20), விஜய்சங்கர் (21), சதீஷ்குமார் (21), புவனேஷ்வரன் (22) என்ற 4 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், சதீஷ்குமாரின் சகோதரர் கோவை தென்னம்பாளையத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அவரை பார்க்க திருப்பூர் பனியன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 4 பேரும் நேற்று காலை ரயிலில் கோவை வந்துள்ளனர். பின்னர் கோவை ரயில் நிலைய தண்டவாளம் அருகே நடந்து சென்றபோது, போதையில் தண்டவாளத்தில் கல் வைத்ததோடு சிக்னல் பாக்சையும் உடைத்துள்ளனர் என்றனர்.
The post சேரன் எக்ஸ்பிரஸை கவிழ்க்க சதி: தூத்துக்குடியை சேர்ந்த 4 பேர் கைது appeared first on Dinakaran.