சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் தளம் பதிவில் கூறியிருப்பதாவது: சேவை, நல்ல நிர்வாகம், ஏழைகளுக்கான ஆட்சி தருவதே ஒன்றிய அரசின் நோக்கம். ஒன்றிய அரசின் சாதனை பயணங்களில் சில. 1.7 லட்சத்திற்கும் மேலான ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் மூலம், 17 லட்சத்திற்கும் மேலான புதிய வேலைவாய்ப்புகள். 8 புதிய ஐஐஎம் கல்வி நிறுவனங்கள். 23 புதிய எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரிகள். நாடு முழுவதும் 7 புதிய ஐஐடிகள். 570 புதிய பல்கலைக்கழகங்கள். பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா(பிஎம்கேவிஓய்) திட்டத்தின் கீழ், 1.42 கோடிக்கும் மேலான இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
டோக்கியோ-2020 ஒலிம்பிக் போட்டிகளில் நமது வீரர்கள் சாதனை செய்ததற்கு அளிக்கப்பட்ட ஊக்கம். ரோஜ்கர் மேளா’ மூலம், 10 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு அரசுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு. 30 ஆண்டுகளுக்குப் புதிதாக திருத்தி அமைக்கப்பட்ட, தேசம் முழுமைக்குமான ‘புதிய தேசிய கல்விக்கொள்கை. மாதம் ஒரு யுனிகார்ன் நிறுவனம் உருவாக்கப்படுகிறது. கேலோ இந்தியா’ திட்டம் மூலம், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
The post இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, திறமைகளை ஊக்குவிக்க அனைத்து நடவடிக்கையையும் ஒன்றிய அரசு செயல்படுத்துகிறது: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தகவல் appeared first on Dinakaran.