நாடு முழுவதும் வக்பு சொத்துக்களை பதிவு செய்ய புதிய டிஜிட்டல் வலை தளம் தொடக்கம்

புதுடெல்லி: வக்பு சொத்துக்களை மேலாண்மை செய்வதற்கு உமீத் என்ற டிஜிட்டல் வலைத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. இது வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதால் முஸ்லிம்களுக்கு பேருதவியாக இருக்கும் என ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார். வக்பு சொத்துக்களை வெளிப்படைத்தன்மையுடன் நிர்வகிப்பதற்கு வசதியாக ஒன்றிய அரசு சார்பில் உமீத் என்னும் வலைதளம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் உள்ள அனைத்து வக்பு சொத்துக்களும் 6 மாதங்களுக்குள் இதில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

உமீத் வலைதளத்தை தொடங்கி வைத்து பேசிய சிறுபான்மையினர் நல துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ,‘‘ புதிய வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான அரசின் உறுதிப்பாட்டுக்கு ஓர் அடையாளம். அந்த சமூகத்திற்கு சொந்தமான வக்பு சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்கு பயனுள்ள வகையிலும், நியாயமாகவும் பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்.மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தளமான இது, வக்பு சொத்துக்களின் நிகழ்நேர பதிவேற்றம், சரிபார்ப்பு, கண்காணிப்புக்காக உருவாக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

The post நாடு முழுவதும் வக்பு சொத்துக்களை பதிவு செய்ய புதிய டிஜிட்டல் வலை தளம் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: